நாம 4 பேரு இப்போ 5 ஆயிட்டோம்... தேமுதிக வருகையை ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய ம.ந.கூ. தொண்டர்கள்!
சென்னை: மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்ததன் மூலம் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்ற புதிய கூட்டணி இன்று உருவாகியுள்ளது. இதனை அக்கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
[தேமுதிக -ம.ந.கூ.கொண்டாட்டம்- படங்கள்]
தமிழக சட்டசபைத் தேர்தலில் வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டணியில், இன்று தேமுதிகவும் கைகோர்த்துள்ளது. யாருடன் கூட்டணி சேர்வார் என்ற பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜயகாந்த், முதலில் தனித்துப் போட்டி என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று திடீரென இந்த புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானதால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

தொண்டர்கள் கூட்டம்...
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலக வாசலில் காலை முதலே மக்கள்நலக் கூட்டணி மற்றும் தேமுதிக தொண்டர்கள் கூட்டம் காணப்பட்டது.

முன்னேற்பாடாக...
நல்ல செய்தி நிச்சயம் வெளியாகும் என்ற ஆவலில் முன்னேற்பாடுடன் இனிப்புகள் மற்றும் பட்டாசுகளோடு அவர்கள் காட்சி தந்தனர்.

பட்டாசுகள் வெடித்தனர்...
இந்நிலையில், புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானதும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், சாலையில் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஸ்வீட் எடு கொண்டாடு...
பின்னர், தாங்களே ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

வாகன ஓட்டிகளுக்கும்...
அதோடு சாலையில் வாகனங்களில் சென்றோருக்கும் அவர்கள் இனிப்புகள் வழங்கினர். அப்படி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு இனிப்பு வழங்கும் புகைப்படம் தான் இது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications