For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ளஸ் டூ தேர்வு முடிவால் முடங்கிய மொபைல் நெட்வொர்க்! தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பு!

ப்ளஸ் டூ தேர்வு முடிவால் மொபைல் நெட்வொர்க் முடங்கியதால் மக்கள்பெரும் அவதியடைந்தனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ப்ளஸ் டூ தேர்வு முடிவால் மொபைல் நெட்வொர்க் முடங்கியதால் மக்கள்பெரும் அவதியடைந்தனர். மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் அரசின் முடிவால் மொபைல் போன் நெட்வொர்க்குகள் ஜாமானதாக தெரிகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ப்ளஸ் டூ தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

Mobile networks got jammed after the 12th results sends through phone

இந்நிலையில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் இனி ரேங்க் முறை இருக்காது என தமிழக அரசு அறிவித்தது. மேலும் முதல் முயற்சியாக ரிசல்ட் வெளியான அடுத்த 10 நிமிடங்களில் மாணவ மாணவிகள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான சற்று நேரத்தில் மொபைல் போன்களை தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் தங்களின் நண்பர்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் ஒருவருக்கொருவர் தேர்வு முடிவுகளை அறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் 9 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப முயன்றதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

English summary
Mobile networks got jammed after the 12th results sends through phone. Due to this issue public could not conduct anybody.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X