மாண்டியாவில் தருமபுரியை சேர்ந்த தமிழர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சி!
தருமபுரி: கர்நாடகாவின் மாண்டியாவில் தருமபுரியைச் சேர்ந்த நவாஸ்பாஷா என்பவர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நவாஸ் பாஷா என்பவர் இன்று அம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் நவாஸ் பாஷா கூறியதாவது:

தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த 11-ந் தேதி உறவினர்களுடன் நானும் சென்றிருந்தேன்.
மறுநாள் நாங்கள் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது மாண்டியாவின் புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் எங்கள் கார் வந்தது.
திடீரென ஒரு கும்பல் நாங்கள் வந்த காரின் தமிழக பதிவு எண்ணை பார்த்துவிட்டு அப்படியே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்தது. இதனால் பதறியடித்து நாங்கள் வெளியேறி அருகே இருந்த காட்டுக்குள் ஓடினோம்.
பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ரயில் மூலம் தப்பித்து சொந்த ஊர் திரும்பியுள்ளோம். நாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு நவாஸ்பாஷா கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications