சென்னையில் இன்று ஏமாற்றிய மழை... லேசான சாரல்+ தூரல்தான்!
சென்னையில் மிதமான மழை பெய்தது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை: சென்னையில் மிதமான மழை பெய்தது. நேற்று போல் இன்றும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. வால்பாறையில் கடந்த 5 தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பெரும் பகுதிகளிலும் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கோடையில் மக்களை வாட்டி வதைத்த இந்த மழை கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது.

குளிர்ந்த வானம்
கடந்த சில நாட்களாகவே வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வெயில் வாட்டி வதைக்காமல் குளிர் நிலவ தொடங்கியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்தது.

கனமழை
நேற்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் தாழ்வான சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

மக்கள் அவதி
தொடர் மழையால் போக்குவரத்து ஆங்காங்கே பாதிக்கப்பட்டது. ரயில் நிலையங்களை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்தனர். 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்தது.

ஏமாற்றிய மழை
வானிலை அறிவிப்பால் நேற்றை போல் இன்று நல்ல மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று காலை முதலே சில நேரம் மேகமூட்டத்துடனும் லேசான வெயிலுடனும் இருந்தது. இதையடுத்து 7 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது. சில இடங்களில் தூரல் மட்டுமே இருந்தது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications