கிரேட் மேனேஜர்.. “அண்ணாமலையை ஓரம்கட்டிய மோடி!” தமிழக பாஜக நிர்வாகம் மாறுதா? காயத்ரி அடித்த கமெண்ட்
சென்னை: தமிழ்நாடு பாஜகவுக்கு நாளை புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவதாக நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி உள்ள பாஜக முன்னாள் நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராம், பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தபோது அண்ணாமலையை டெல்லிக்கு அனுப்பி வைத்ததாகவும், தேர்தல் கமிட்டி கூட்டத்தில் அவரை ஒரு மூலையில் உட்கார வைத்ததாக விமர்சித்து உள்ளார்.
தனியார் நாளிதழில் நேற்று வெளியான செய்தியில், தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட இருப்பதாகவும், அதே நேரம் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட மாட்டார் எனவும் தகவல் வெளியானது.

டெல்லியில் சில நாட்கள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தங்கி இருந்த நிலையில், அவரை தவிர்த்து மாநில துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட 400 நிர்வாகிகள் நியமிக்கப்பட இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
காயத்ரி விமர்சனம்: அந்த செய்தியை ட்விட்டரில் சுட்டிக்காட்டி இருக்கும் காயத்ரி ரகுராம், "ஐ.பி.எஸ். பதவியை விட்டு வெளியேறிய பிறகு, ஓட்டுக்கு 1000 கொடுத்து உங்கள் ஐபிஎஸ் பணத்தை தேர்தலில் விட்டுவிட்டு, கட்சிக்காக 1 வருடம் உழைத்து ஹனிட்ராப் செய்து மேனேஜர் பதவியை கைப்பற்றிய பிறகு, 75 ஏக்கர் கரூர் கிராமத்தை விட்டு வெளியேறிய பிறகு, ஆடு அனைத்தையும் தியாகம் செய்த பிறகு, குறைந்த விலை 3.5 லட்சம் வாடகைக்கு ECR இல் பங்களாவில் தங்கியிருந்தார்.

ஆருத்ரா மோசடி: ஒரே நாளில் சுவாசிக்க 1 லட்சம் செடிகளை நட்டு, உங்கள் ரஃபேல் கடிகாரத்திற்கு Z பாதுகாப்பு கொடுத்து, சுரானா, IFS, ஆருத்ரா, ஹிஜாப் மற்றும் பிற நிறுவனங்களில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தால குறைந்த விலையில் 1000-10000 தங்க மோதிர பீர் டெப் ஹனிட்ராப் வார்ரூமுக்கு வாங்கி கொடுத்து விளம்பரம் செய்த பிறகு, விவிஐபி வாழ்க்கை வாழாமல் சாராய அமைச்சருடனும் அழுகிய முட்டை அமைச்சருடனும் தினமும் சண்டை போடுவது போல் நடித்தார்.
ஓரம்கட்டிய மோடி: என்ன ஒரு தேச பக்தி, என்ன ஒரு நாட்டுக்கு சேவை, என்ன ஒரு கடினமான வேலை, இந்த நிர்வாகிகள் நியமனம் உலகை மாற்றும். 10 முறை நிர்வாகிகள் அப்பாயிண்ட்மெண்ட்டை மாற்றுவது உங்கள் ஆளுமையை காட்டுகிறது. மேனேஜர் யு ஆர் தி கிரேட். கவலைப்பட வேண்டாம் நீங்கள் விரும்பியபடி வீரமணி அய்யாவுடன் சூரிய கிரகணத்தில் விருந்து சாப்பிட உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்.

பாவம் பிரதமர் மோடிக்கு உங்கள் உழைப்பு புரியவில்லை. அவர் சென்னைக்கு வந்தபோது உங்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தார், தேர்தல் கமிட்டி கூட்டத்தில் வியூகத்தை கூட ரேகார்ட் செய்ய முடியாத நிலையில் உங்களை ஒரு மூலையில் உட்கார வைத்தார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications