தமிழக வெள்ள நிவாரணத்தில், லேடிய விட மோடிதான் பெஸ்ட்! ஜெ.வை சீண்டும் பாஜக
சென்னை: தமிழக வெள்ள நிவாரணத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு மெத்தனமாக இருப்பதாகவும், அதற்கு நடுவேயும், பிரதமர் மோடி பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுக்க காரணமாக இருந்துள்ளதாகவும் பாஜக ஆதரவாளர்களால் வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்று தீயாய் பரவி வருகிறது.
கடந்த மக்களவை தேர்தலின்போது, அதிமுக, திமுக, பாஜக தலைமையிலான கூட்டணி என தமிழகத்தில் மும்முனை போட்டி உருவானது. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா, மோடியா, இல்லை இந்த லேடியா என்பதை பார்த்துவிடலாம் என்று பஞ்ச் வைத்து உரையாற்றினார்.

தேர்தல் முடிவில், தமிழகத்தில், கன்னியாகுமரி மற்றும் தருமபுரி மக்களவை தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றிய நிலையில், எஞ்சிய அனைத்து தொகுதிகளையும் அதிமுக வென்றது. திமுக எந்த தொகுதியிலும் ஜெயிக்கவில்லை.
இந்நிலையில், தமிழக வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஜெயலலிதா அரசைவிட மோடியின் மத்திய அரசுதான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் சுற்றி வருகிறது.
அந்த மெசேஜ் இதுதான்: உத்ரகாண்ட் பாதிப்பில் மத்திய அரசின் உதவியில்லாமல் அந்த மாநில மக்களை மீட்கும் கஷ்டத்தை உணர்ந்து அதுபோல வேறு மாநில முதல்வர் அவ்வேதனையை பட கூடாது என்று தமிழகத்தில் மழைபொழியும் போதே மத்திய அரசு அணைத்து உதவிகளையும் செய்யதயார் என அறிவித்தது.
தமிழகம் 10 நாட்கள் கழித்துதான் நிவாரணம் கேட்டு அறிக்கை சமர்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் ரூ.940 கோடி கொடுக்கப்பட்டது. சில நாட்களில் மீண்டும் மழை. முன்பு பெய்த மழையின்போது, உதவ தயார் என்று அறிவித்தும், 10 நாட்கள் கழித்துதான் உதவி கேட்டவர்களின் வேகத்தை உணர்ந்த பிரதமர், தானே நேரடியாக தமிழக முதல்வரிடம் பேசினார். அவர் கேட்டதை உடனே செய்வதாக அறிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் முன்பு மழைக்கு வந்து தங்கியிருந்த ராணுவத்தினர் களம் இறங்கினர். மறுநாள் 800 தேசிய பேரிடர்குழு வீரர்கள் படகு, 4 ஹெலிகாப்டர்கள் கடற்படை கப்பல் நிவாரண பொருட்களோடு களமிறங்கியது, மீட்புபணியில் சுணக்கத்தை உணர்ந்த பிரதமர் மாநில அரசு அழைக்காமலே பாதிப்புகளை பார்வையிட்டார். அதன் பலன் உடனடியாக, ரூ.1000 கோடி. தமிழகத்திற்கு கிடைத்தது.
ஒரு வாரம் BSNL தொலைபேசி இலவச சேவை, நெடுஞ்சாலை சுங்கசாவடிகளில் வரி இல்லை, 50000 சூரிய சக்தி மின் விளக்குகள், ரயில்வே நிர்வாகம் மூலம் 100000 வாட்டர் பாட்டில்கள் இலவசம், விமானநிலையம் பாதிக்கப்பட்டபோது ராணுவதளத்தில் குறைவான கட்டனத்தில் விமான சேவை
, வாளி, குவளை, துண்டு போன்றவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்படை ஊழியர்கள் மூலம் விநியோகம்.
சனிகிழமை முதல் அனைத்து ATM லும் பணம் வைக்க கடும் உத்தரவு, நடமாடும் ATM தொடக்கம், ஞாயிற்று கிழமை வங்கி செயல்பட உத்தரவு,
ராணுவ தளபதி நேரில் ஆய்வு, 4ஹெலிகாப்டர் 7 ஆனது, மேலும் 200 கடற்படை வீரர்கள் சேர்கப்பட்டார்கள். 20 தேசிய பேரிடர் மீட்புகுழு 800 வீரர்களோடு வருகிறது, இரண்டு கடற்படைபோர்கப்பல்கள் நிவாரணபொருட்களோடு வருகிறது.
.
இவை எல்லாம் இந்தியபிரதமராக யார் வரக்கூடாது என நினைத்து தமிழகம் வாக்களித்ததோ அவர் தன் கடமையாக தமிழகத்திற்க்கு பறந்து வந்து செய்தது. (சத்தியமாக மத்திய அரசின் விளம்பரத்திற்கு அல்ல. ஏனெனில் இதில் மோடி படம் இல்லை). இவ்வாறு முடிகிறது அந்த மெசேஜ். ஆனால், அதிமுக சார்பிலோ, மத்திய அரசு தமிழகத்துக்கு உதவி செய்யவில்லை என்ற பழைய பல்லவி பாடப்படுவதை அக்கட்சி பேச்சாளர்களின் தொலைக்காட்சி பேட்டிகளில் பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications