அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி... 15 ஆண்டுகால காங். ஆட்சி மீது தாக்கு!!
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். அஸ்ஸாமில் 15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் அரசை மிகக் கடுமையாக பிரதமர் மோடி தாக்கியுள்ளார்.
அஸ்ஸாம் மாநில சட்டசபைக்கு ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுடன் அஸ்ஸாம் மாநில தேர்தலும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
அஸ்ஸாமின் கோக்ரஜாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஒரே ஆட்சி 15 ஆண்டுகள் நடைபெற்ற போதும் 10 ஆண்டுகள் பிரதமரையே ராஜ்யசபா எம்.பி.யாக கொண்ட மாநிலமாக இருந்த போதும் அஸ்ஸாமில் இவ்வளவு பிரச்சினைகள் ஏன் நீடிக்கிறது?
இந்த 15 ஆண்டுகளில் ஆண்ட காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை என்பதுதானே... ஆனால் பிரச்சனைகளை நாங்கள் 15 மாதத்தில் சரி செய்ய வேண்டுமாம்....
எனது ஆட்சி பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக அஸ்ஸாமில் நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? என்பதற்கான பதில் என்ன?
மக்களைக் குழப்பவே காங்கிரஸ் விரும்புகிறது.... அவர்களது 15 ஆண்டுகால ஆட்சியையும், எங்களது 15 மாத ஆட்சியையும் நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக குவஹாத்தில் பிரதமர் மோடியை அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications