For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த் கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்த மோடி!!

By Siva
|

சேலம்: சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி தேமுதிக தலைவர் விஜயகாந்தை கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தார். அந்த கூட்டத்தில் பிரேமலதா ஆங்கிலத்தில் பேசி அசத்தினார்.

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருத்தம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசி அந்த குறையை தீர்த்து வைத்துவிட்டார்.

கையை பிடித்து

கையை பிடித்து

மோடி விஜயகாந்தின் கையை இறுக்கிப் பிடித்து அவரை மேடைக்கு அழைத்துச் சென்றார். இருக்கையில் அமரும் வரை விஜயகாந்த் கையை மோடி விடவே இல்லை.

படபடப்பு

படபடப்பு

மேடையில் பேச வந்த விஜயகாந்த் படபடவென பேசினார். மோடிஜி விமானத்திற்கு செல்ல நேரமாகிவிட்டதால் தான் நான் இப்படி பேசுகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி ஆயிரத்தி தொல்லாயிரத்தி, 2004, 2009ம் ஆண்டு தேர்தலில் கருப்புப் பணத்தை கொண்டு வருகிறோம் என்று காங்கிரஸ் சொன்னாங்க. 20014ம் வந்துடுச்சு பணத்தை கொண்டு வரலை என்று கூறினார் விஜயகாந்த்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அதிமுகவை திட்டுவதால் தான் பாஜக பிரபலமாகி உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். மோடியை தெரியாமலா அவர் 4வது முறையாக முதல்வராக பதவியேற்றபோது போனீங்க, அனுப்புனீங்க. இல்லை நீங்க முதல்வராக பதவியேற்றபோது அவரை அழைத்தீர்கள்.

தெரியாமலா

தெரியாமலா

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி? தெரியாமலா நரேந்திர மோடிஜியை நீங்கள் முதல்வராகும் போது அழைத்தீர்கள்.

2004

2004

2004ல் அதிமுக ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. அவர்கள் இன்றைக்கு ஆடலாம், குதிக்கலாம். ஜெயலலிதா ஹெலிகாப்டரிலேயே வந்துவிட்டு போகிறார் என்றார் விஜயகாந்த்.

தோளை தட்டி

தோளை தட்டி

மேடையில் தனது அருகே அமர்ந்திருந்த விஜயகாந்தின் தோளை தட்டி மோடி அழைத்தார். அதன் பிறகு அவர்கள் காதும், காதும் வைத்தது போன்று பேசினார்கள்.

பிரேமலதா

பிரேமலதா

பிரசார கூட்டத்தில் முதலில் உரையாற்றிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா முதலில் ஆங்கிலத்தில் பேசினார். மீண்டும் அதே உரையை தமிழிலும் பேசினார்.

மோடிக்கு புரியணுமே

மோடிக்கு புரியணுமே

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியதாக தேமுதிகவினர் தெரிவித்தனர்.

English summary
BJP's PM candidate Modi seems to have so much affection for DMDK chief Vijayakanth. It is evident in the meeting held in Salem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X