சென்னை வந்தார் மோடி - பாஜகவினர் சிறப்பான வரவேற்பு
சென்னை: பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இன்று வருகை தந்தார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நானி பல்கிவாலா அறக்கட்டளை விழாவில் கலந்து கொள்ள இன்று மாலை 3.15 மணி அளவில் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பாஜக நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தும் செங்கோல் கொடுத்தும் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து மோடி பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார். அங்கு கட்சி தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கும் நானி பல்கிவாலா அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
இந்த விழாவில் பத்திரிக்கையாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய 'சுய துரோகம் - இந்தியாவின் சீனக் கொள்கைகள்' என்ற நூலை அவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சோ. ராமசாமி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பின்னர் மோடி தனி விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை மோடி சந்திப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை.

மோடியின் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரில் ஆங்காங்கே வாகனச் சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில் சந்தேத்திற்கு இடமாக யாரேனும் தங்கியுள்ளார்களா என்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications