பிப். 2ல் கோவை வருகிறார் மோடி.. இஎஸ்ஐ மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார்
கோவை: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 2ம் தேதி கோவை வருகிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு அதிநவீன மருத்துவ கருவிகளுடன் புதிய சிகிச்சை பிரிவு கட்டவும், மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரூ.650 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி கட்டடம் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு கட்டடம், 24 மணி நேர சேவை மையம் ஆகியவை கட்டப்பட்டன. இதையடுத்து மருத்துவக் கல்லூரி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு டீனும் நியமிக்கப்பட்டு விட்டார்.
இந்த மருத்துவக் கல்லூரிக்கு அனுதி வழங்குவது தொடர்பான ஆய்வையும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் முடித்து விட்டனர். இதையடுத்து இ.எஸ்.ஐ. வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள வெளி நோயாளிகள் பிரிவு கட்டடம், 24 மணி நேர சேவை மையம் ஆகியவை பிப்ரவரி 2ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் தொடங்கியுள்ளன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications