தூக்கில் தொங்கிய தாய், குழந்தைகள்! "இப்படி பண்ணிட்டீங்களே.." கதறும் லேத் பட்டறை உரிமையாளர்
விருத்தாச்சலம்: குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே வீட்டில் தாய், மகன், மகள் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். இவர் சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் சகீராபானு (வயது 40) என்ற மனைவியும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத் (வயது 12), 5 ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஹேமவர்ஷினி (வயது 10) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஒரே வீட்டில்
நேற்று வழக்கம்போல் அனைவரும் வீட்டில் உறங்கி இருக்கிறார். குமார் வீட்டில் உள்ள கூடத்தில் படுத்து உறங்கி உள்ளார். அவரது மனைவி சகீராபானு மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் அறைக்குள் படுத்து தூங்கி உள்ளனர். இந்த நிலையில் காலை வெகு நேரமாகியும் மனைவியும் குழந்தைகளும் அறையிலிருந்து வெளியே வரவில்லை.

தூக்கிட்டு தற்கொலை
அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார் குமார். அப்போது மனைவி, மகன், மகள் என மூவரும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

போலீஸ் விசாரணை
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று உடல்களையும், மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சகீராபானுக்கு இடையே, கடந்த மூன்று மாதங்களாக பிரச்சனை இருந்து வந்ததது தெரிய வந்தது.

குடும்ப பிரச்சனை
இதனால் மனமுடைந்த ஷகீரா பானு, தனது மகன் மற்றும் மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து, மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டதாகவும், அதன் பின்னர் சகீரா பானுவும் மின்விசிறியில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று இதேபோல் கன்னியாகுமரியில் தந்தை, மனைவி, மகள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications