தென்னைக்கு வைக்கும் மருந்தை மருமகள் வாயில் திணித்துக் கொன்றேன்.. மாமியாரின் பரபர வாக்குமூலம்
போடிநாயக்கனூர்: எனது மருமகள் சீதனம் ஏதும் கொண்டு வராமல் வந்ததால் கோமடைந்து அவளைக் கொலை செய்தேன். அவளது வாயில் தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை எடுத்து கட்டாயப்படுத்திக் கொலை செய்தேன் என்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கைது செய்யப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் சதீஷ்குமார் (25). இவர் திருச்சியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்க்கும்போது, உடன் வேலை பார்த்த திருச்சி கீரனூர் அருகே உள்ள பொக்கிசகாரன்பட்டியைச்சேர்ந்த பூபதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு போடியில் உள்ள சதீஷ்குமாரின் வீட்டில் வசித்து கொண்டே கணவன், மனைவி இருவரும் தேனியில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பூபதி வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பார்த்திபன் விசாரணை நடத்தினார். விசாரணையில் பூபதியின் மாமியார் சுலோச்சனாதான் இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரிடம் சுலோச்சனா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில்,
எனது வீட்டின் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மருமகள்கள் வரதட்சணையாக பணம், பொருட்கள் கொண்டு வந்த நிலையில் தனது மருமகள் மட்டும் சீதனமாக எதுவும் கொண்டு வரவில்லை என்று மிகுந்த ஆத்திரம் அடைந்தேன். இதனால் என்னுடைய மருமகளை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. இதை அடுத்து அதற்கான நேரத்திற்காக காத்திருந்தேன்.
சம்பவத்தன்று காலையில் சமையல் செய்யும்போது, கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக எனது மகனிடம் மருமகளை தனக்கு உதவியாக வீட்டில் விட்டு செல்லுமாறு கூறினேன். இதையடுத்து சதீஷ்குமார் மட்டும் வேலைக்கு சென்றான்.
அன்று மதிய நேரம் அருகில் யாரும் இல்லாதபோது தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையை அள்ளி பூபதியின் வாயில் போட்டு திணித்தேன். மாத்திரையை நாக்கில் வைத்ததும், பூபதி மயங்கி விழுந்து இறந்து விட்டார் என்று கூறியுள்ளார் சுலோச்சனா.
பரிதாபத்துக்குரிய பூபதி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராம். மாமியாரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பூபதியின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications