கோவையில் அதிரடி ரெய்டு... ரூ 59 லட்சம் பறிமுதல்-ஹவாலா பணமா என விசாரணை
கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 59 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதியை நேற்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி உரிய ஆவணங்கள் இன்று எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், வாளையார் பாம்பம்பள்ளம் அருகே, திருத்தலா போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து, பாலக்காடு நோக்கி வந்துக் கொண்டிருந்த, தமிழக அரசு பேருந்தில், பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரமேஷ், பிருத்விராஜ் ஆகியோர் வைத்திருந்த பையில் 59 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை வருமானவரித் துறையிடம் ஒப்படைத்த போலீசார், இருவரிடம் விசாரணை செய்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications