For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகரில் பெண் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்? வைலராகும் வீடியோ

டிடிவி தினகரன் இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இது அவருக்கு கவுரவ பிரச்சினை என்பதால் ஒரு வாக்காளருக்கு ரூ.10000 வரை பணம் கொடுக்க வாய்ப்பிருப்பதாக தக

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தி பெண்களிடம் பணம் கொடுக்கப்படுவதாக கூறி ஒரு வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி பிரமுகரும், கட்சியின் ஐடி விங் இணை செயலாளருமான ஹரிபிரபாகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த வீடியோவை ஷேர் செய்து, டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகள், ஆர்.கே.நகரில் ஒரு வாக்குக்கு, 200 ரூபாய் வினியோகம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பணத்தை சப்ளை செய்யும் நபர், டிடிவி தினகரன் கட்சியின் சின்னமான, தொப்பியை தலையில் அணிந்தபடி பெயரை குறித்துக்கொள்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிரது.

"ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, 38வது வட்டம், பாகம் எண் - 2 சாஸ்திரி நகர் 3வது தெருவில், நேற்று வாக்கு சேகரிக்க வந்த டிடிவி தினகரனுக்கு பெண்களை வைத்து ஆரத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆரத்தி எடுத்த பெண்களுக்கு, இன்று நபர் ஒருவருக்கு ரூபாய் ரூ.200 வீதம் டோக்கன் முறையில் பணம் கொடுத்துள்ளார்கள்" என்று குற்றம்சாட்டுகிறார் ஐடி விங்க் நிர்வாகி ஒருவர்.

ஏப்ரல் 12ம் தேதிதான், ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இப்போதே பணம் தண்ணீராய் ஓட ஆரம்பித்துள்ளது என்பதைத்தான் இந்த வீடியோ காண்பிக்கிறது.

டிடிவி தினகரன் இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இது அவருக்கு கவுரவ பிரச்சினை என்பதால் ஒரு வாக்காளருக்கு ரூ.10000 வரை பணம் கொடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Rs 200 distributed to the voters by TTV Dinakaran party cadres in RKNagar alleges O.Pannerselvam men.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X