ஓட்டுக்குப் பணம் அதை விட மிகப் பெரிய தீமை!- கவிஞர் வைரமுத்து
கோவை: இருப்பதிலேயே குறைந்த தீமை கொண்ட ஆட்சி முறை ஜனநாயகம். அதில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது மிகப் பெரிய தீமை, என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் இயங்கும் ‘எழுத்து' தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில் கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியது:

இலக்கியவாதிகளின் எண்ணிக்கை குறைவதாக இங்கு சுட்டிக் காண்பித்தனர். உலோகத்தில் தங்கம் குறைவாக கிடைப்பதனால்தான் மதிப்பு மிகுந்து விளங்குகிறது. அதுபோல் இலக்கியவாதிகள். குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எப்போதும் போற்றப்படுவார்கள். 8 கோடி தமிழ் மக்களுக்காக எழுத்தாளர்கள் எழுதவில்லை. எதிர்கால சந்ததிகளான 800 கோடி மக்களுக்காகத்தான் எழுதுகிறார்கள். எனவேதான் எழுத்தாளர்கள் சோர்வடைவதில்லை.
தமிழ்பசி, இலக்கிய பசி நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். தமிழுக்கு விரோதபோக்கு தொழில்நுட்பத்திலும், உலகமயமாதலிலும், சந்தைப்பொருளாதாரத்திலும்தான் ஆரம்பிக்கிறது. மொழியின் பாரம்பரியத்தை உணர்ந்து எழுதினால்தான் சிறந்த எழுத்தாளராக முடியும்.
தொழிலாளி தொடர்பாக ஒருவர் எழுதிய கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தொழிற்சாலையில் போனஸ் வழங்குவது தொடர்பாக போராட்டம் நடைபெறுகிறது. இறுதியில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அப்போது ஒரு தொழிலாளி மட்டும் போனஸ் வாங்க மறுக்கிறார். ‘நீங்கள் போடும் சில எலும்பு துண்டுகள்தான் இது. அதுவும் எங்கள் உடம்பில் இருந்து எடுக்கப்பட்டதுதானே?' என்று அந்த தொழிலாளி கேட்கிறார்.
இதுபோல்தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமையை விளைவிக்கும். ஜனநாயகம் தான் மற்ற ஆட்சிகளை விட குறைந்த தீமையை கொண்டது என்பார்கள். ஆனால் பெரிய தீமைக்கு அது வழிவகுத்து விடக்கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறம் சார்ந்தவர்களும், அறிவு ஜீவிகளும் விரும்புவதில்லை," என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications