ஏமாற்றிய பருவமழை: கேள்விக்குறியாகும் நெல் உற்பத்தி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் நெல் உற்பத்தி பெருமளவு சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நீரை கொண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் நடக்கிறது. இவ்விரு மாவட்டங்களிலும் தென் மேற்கு பருவமழை ஏமாற்றினாலும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்து பிசான பருவ சாகுபடிக்கு கை கொடுக்கும்.

வடகிழக்கு பருவமழையின் முக்கிய காலமான நவம்பர் மாதம் முடியும் தருவாயில் இருப்பதால் இன்று வரை போதிய மழை பெய்யவில்லை. இதனால் பிசான பருவ சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்கு 1,34,178 ஏக்கர் பரப்பளவில் நெல் விளைவிக்க வேளாண்மை துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் விவசாயிகள் வெறும் 7,793 ஏக்கர் மட்டுமே நாற்று நட்டு நடவு தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பருவ மழை காலத்தில் கொட்டித் தீர்த்த மழையை ஒப்பிடும்போது 5ல் ஒரு பங்கு மழை கூட இந்தாண்டு பெய்யவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நெல்லை மாவட்டத்தில் 234.59 மிமீ மழை பெய்தது. இந்தாண்டு அக்டோபர் மாதம் 84 சதவீதம் தான் மழை பெய்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கவலை தரும் விதத்திலேயே உள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் பாபநாசம் உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் சதம் அடித்திருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வானம் மப்புடன் காணப்பட்டாலும் மழை இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications