சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் சிக்குவது யார்?
சிவகங்கை: சிவகங்கையில் பள்ளி சிறுமி, தந்தை, சகோதரர், காவல் உதவி ஆய்வாளர் உட்பட 20க்கும் அதிகமானோரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகங்கை காவல் ஆய்வாளர் ராதிகா சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
சிபிசிஐடி டிஎஸ்பி மன்மத பாண்டியன் மற்றும் ஆய்வாளர் சேகர் தலைமையில் முதல்கட்டவிசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகளிடம் தற்போது முதல் கட்ட விசாரணையை இவர்கள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி விசாரணையில் உயரதிகாரிகள் பலரும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகங்கையைச் சேர்ந்த சிறுமியை கடந்த 10 ஆண்டுகளாக டாக்டர்கள், வக்கீல், கண்டக்டர், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது
குறித்து போலீஸ்நிலையம் சென்று புகார் கொடுத்தபோது எஸ்.ஐ.சங்கர் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு நிற்காமல், ஐஜி அலுவலகத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு சிறுமியை
அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரும் சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அப்போது ஐஜியாக இருந்தவரும் தற்போது சென்னையில் ஏடிஜிபியாக உள்ளவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அந்த ஏடிஜிபியும் பல முறை சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிவகங்கை மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரித்து வந்தனர். சிவகங்கை மாஜிஸ்திரேட்டிடம் சிறுமி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தநிலையில், சிறுமி விவகாரத்தில் ஏடிஜிபி
வரை உள்ள அதிகாரிகள் சிக்குவதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வின்சென்ட் வழக்குத் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து சிறுமியின்
தந்தை, சகோதரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின் சிவகங்கை எஸ்.ஐ. உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து சிறுமியிடம் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது ஐஜி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவரின் புகைப்படத்தை காட்டியபோது
அவர்தான் பலாத்காரம் செய்தார் என்று அடையாளம் காட்டினார். இதனால் அவரை கைது செய்தால், உயர் அதிகாரிகளை அவர் காட்டிக் கொடுத்து விடுவார். இதனால் அவரை கைது செய்யக் கூடாது
என்று சென்னையில் இருந்து விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது
சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதை வெளிக்கொண்டு வந்ததால், மர்ம நபர்கள்,தனக்கு கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் வின்சென்ட் தெரிவித்துள்ளார். போலீசார் எனக்கு பாதுகாப்பு அளிக்க
வேண்டும் என்றும் வழக்கறிஞர் வின்சென்ட் கூறியுள்ளார்.
இதனிடையே சிறுமி பலாத்கார வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக காவல்துறை டிஜிபி அசோக்குமார் நேற்று பிறப்பித்துள்ளார். காவல்துறை
உயரதிகாரிகளும் இந்த வழக்கில் சிக்கியுள்ளதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு கடந்து வந்த பாதை
• ஜூன் 5: சிவகங்கையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, அண்ணன் கார்த்தி கைது செய்யப்பட்டனர்.
• ஜூன் 17: காரைக்குடி நீதிமன்றத்தில் சிறுமி தனக்கு பாலியல் கொடுமை செய்த நபர்களில் அவருக்கு நன்கு தெரிந்தவர்களை பெயருடனும், சிலரை அடையாளம் கூறியும், பல ஆண்டுகளாக ஏராளமானோர் பாலியல் கொடுமை செய்து வந்ததாக நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.
• சிறுமி சென்னையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.
• பலாத்கார வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கடவில்லை.
• அக். 5: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் வின்சென்ட் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
•அக். 7: சிவகங்கை டவுன் போலீஸ் எஸ்ஐ சங்கர் , சுரேஷ்குமார், செந்தில்குமார் , அரவிந்த் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
• அக். 9: மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கண்டக்டர் நமச்சிவாயம் , சிவகங்கை முத்துராக்க) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
• அக்.11: காப்பகத்தில் இருந்த சிறுமியிடம் கூடுதல் எஸ்.பி விசாரணை செய்தார்
• அக். 14: சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications