மோடி சென்னை வெள்ளத்துல நடந்தது.... படகுல போனது உங்களுக்கு தெரியுமா?
சென்னை: பிரதமர் மோடி அரசின் துறைகளும் சரி, ஆதரவாளர்களும் சரி அவருக்கு பெருமை சேர்க்கிறோம் என கூறிக் கொண்டு போட்டோஷாப் மூலம் செய்யும் வேடிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.. சென்னையில் வெள்ள சேதங்களை விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர், வெள்ள நீரில் இறங்கி பார்த்தார்; படகில் ஏறி போய் பார்த்தார் என பொய்பிரசாரம் செய்து வருகின்றனர்.
சென்னையை புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அலைபாயும் நிலைமை உருவாகிவிட்டது. இந்தப் பேரவலத்தை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட மத்திய அரசின் செய்தி வெளியீட்டுப் பிரிவான பி.ஐ,பி, போட்டோஷாப் மூலம் ஒட்டு வேலை செய்து ஹெலிகாப்டரில் இருந்து பிரதமர் மோடி 'தெளிவான நிலையில்' தெரியும் கடிட்டங்களை பார்ப்பதாக ஊடகங்களுக்கு ஒரு படத்தை அனுப்பி வைத்தனர்.
அதெப்படி வானில் பறக்கும் போது கீழே உள்ள கட்டிடங்கள் தெளிவாகத் தெரியும் என்று சமூக வலைதளங்களில் கொந்தளிக்க டூப்ளிகேட் படத்தை நீக்கியது பி.ஐ.பி. பின்னர் இதற்கு வருத்தமும் தெரிவித்தது.
இந்த நிலையில் "Dinu Satapathy" என்பவர் தம்முடைய வலைதளத்தில் 2 படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி, படகில் சென்று வெள்ளத்தைப் பார்வையிடுவதாகவும் மற்றொன்று வெள்ளத்தில் நடந்து சென்று பார்வையிடுவதாகவும் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் பிரதமர் மோடி இப்படித்தான் சென்னை வெள்ளத்தைப் பார்வையிட்டதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பட்ம் வேறு எங்கோ வெள்ளப் பகுதியில் எடுக்கப்பட்டதா? அல்லது போட்டோஷாப்பா என தெரியவில்லை.
இது போன்ற செயல்கள் பிரதமர் மோடியின் பெயரைத்தான் நாறடிக்கும் தவிர நிச்சயமாக ஒருபோதும் எந்த விதத்திலும் அவருக்கு உதவாது என்பதை இந்த வேலைகளைச் செய்வோர் புரிந்து கொள்வது அவசியம்.
-
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications