தமிழகத்தில் 30,000 "பத்தாப்பு" டாக்டர்கள் – விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மதுரவாயல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பீம்ராவ் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னை காமராஜர் அரங்கில் நடக்கிறது. இதையொட்டி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் மக்களுக்கான மருத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் கலந்து கொண்ட பீம்ராவ், "மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்தையாவது ஒதுக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதி பெற்று தான் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
மக்கள் நலன் கருதி இந்த விதியினை மாற்றி அமைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மேலும், மருத்துவ அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. தமிழகத்தில் 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக செய்திகள் வருகிறது. மக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற போலி மருத்துவர்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications