தர்மபுரியில் பெற்ற குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தாய்
தர்மபுரி: தர்மபுரியில் பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்தவர் ராமன்(29). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த அஞ்சலி (24) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்வது என முடிவு செய்து பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி அஞ்சலிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை அவரது கணவர் ராமருக்கு பிறந்தது என்பதால் அதை வளர்க்க அஞ்சலி விரும்பவில்லை.
இதனால் அஞ்சலி தனது குழந்தையை யாருக்காவது கொடுத்துவிட முடிவு செய்தார். இந்த தகவல் அறிந்த இரு பெண்கள், அஞ்சலியிடம் குழந்தையை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இதனையடுத்து பென்னாகரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு அந்த குழந்தையை ரூ. 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த தகவல் கிடைத்த பென்னாகரம் போலீசார் இது குறித்து ரகசிய விசாரணை நடத்தினர். இதில் அஞ்சலி தனது குழந்தையை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பெற்ற குழந்தையை விற்பனை செய்ய முன் வந்த அஞ்சலி, அவருக்கு துணை போன ஆனந்த், செல்வி, மாதம்மாள் ஆகிய 4 பேரை கைது போலீசார் செய்தனர். விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications