சொத்து தகராறில் தாய் வெட்டி கொலை... மகனை கைது செய்து போலீசார் விசாரணை
செங்கோட்டை : சொத்து தகராறில் பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவத்தையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஸ்வநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் 58 வயதான கிருஷ்ணன். விவசாயியான இவருக்கு பாப்பா என்ற மனைவியும் , 28 வயதான கோபால், 24 வயதான வேல்முருகன் கலா என்ற மகளும் உள்ளனர்.

பாப்பா தனது கிருஷ்ணனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும் அப்பகுதியை சார்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாப்பாவுக்கு சொந்தமாக ஒருவீடு உள்ளது. அந்த வீட்டை அவரது மகன் வேல்முருகன் தனது பெயருக்கு மாற்றி தருமாறு கேட்டு வந்துள்ளார். இதன் காரணமாக தாய்க்கும், மகனுக்கும் ஏற்கனவே பகை இருந்து வந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று (வியாழன்) காலையும் தாய்க்கும், மதுபோதையில் இருந்த மகனுக்கும் மோதல் ஏற்ப்பட்டுள்ளது.ஆனால் வேல்முருகன் சொல்வதை கண்டுக்கொள்ளாமல் பாப்பா விவசாய வேலைக்கு சென்றுவிட்டார்.
தாயின் மீது கோபத்தோடு மது போதையில் இருந்த வேல்முருகன், தாய் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தாயை வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை ஆய்வாளர் பொறுப்பு ஜமால் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, ஜெயசங்கர், சிக்கந்தர்.மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது வேல்முருகன் அந்தப் பகுதியில் நின்றிருந்தார்.
அவரை போலீசார் விரட்டிபிடிக்க முயன்றனர். அவர் போலீசாரை மிரட்டிவிட்டு தப்பி ஓடியபோது, போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications