Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது மகன் கொலை.. ஒருவர் கைது.. திடுக்கிடும் தகவல்!

சென்னையில் தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் கள்ளக்காதலால் சிறுவன் கொல்லப்பட்டதில் தாயும் கைது- வீடியோ

    சென்னை: தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை நெசப்பாக்கத்தை அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா.

    இந்த தம்பதியின் 9 வயது மகன் ரித்திஷ் சாய். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

     மின்வாரியத்தில் பணி

    மின்வாரியத்தில் பணி

    மஞ்சுளா மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். பள்ளி முடிந்ததும் சிறுவனை தாய் அல்லது தந்தை அழைத்து வருவது வழக்கம்.

     தாயின் கள்ளக்காதல்

    தாயின் கள்ளக்காதல்

    அப்படி இருக்கையில் தாய் மஞ்சுளாவிற்கு அப்பகுதியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் நாகராஜும் ரித்திஷை அவ்வப்போது அழைத்து வந்துள்ளார்.

     சிறுவன் கொலை

    சிறுவன் கொலை

    இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பயிற்சி வகுப்புக்கு சென்ற சிறுவனை நாகராஜ் கடத்தி சென்றுள்ளார். பின்னர் சேலையூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இரும்புக்கம்பியால் அடித்தும் கழுத்தை அறுத்தும் நாகராஜ் சிறுவனை கொலை செய்துள்ளார்.

     போலீஸ் அதிர்ச்சி

    போலீஸ் அதிர்ச்சி

    சிறுவன் மாயமான புகாரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு மஞ்சுளா - நாகராஜ் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜின் சேலையூர் வீட்டிற்கு சென்ற போலீசார் உள்ளே பார்த்தனர். அப்போது சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

     நாகராஜிடம் விசாரணை

    நாகராஜிடம் விசாரணை

    இதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறுவனை கொலை செய்த நாகராஜை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

     தந்தையிடம் போட்டுக்கொடுத்ததால்

    தந்தையிடம் போட்டுக்கொடுத்ததால்

    அதில் சிறுவன் ரித்திஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நாகராஜ் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். அதாவது மஞ்சுளாவிற்கும் தனக்கும் உள்ள தொடர்பை ரித்திஷ், தனது தந்தையான கார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.

     சிறுவனை பழிவாங்கிய நாகராஜ்

    சிறுவனை பழிவாங்கிய நாகராஜ்

    இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், நாகராஜை எச்சரித்ததோடு அவர் மீது சில மாதங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் சிறுவனை பழிவாங்க கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

     போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ரித்திஷ் கொலையில் தாய் மஞ்சுளாவிற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி அவரையும் கைது செய்தனர். தாயின் கள்ளக்காதலால் 9 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+