தீபாவளிக்கு ஊட்டிக்கு போறீங்களா? மலை ரயிலில் டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா? ரயில்வே முக்கிய அறிவிப்பு
மேட்டுப்பாளையம்: குன்னூர் மலை ரயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வரும் 16ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூரில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி இரவு கனமழை பெய்த நிலையில் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து பராமரிப்பு பணி முடிந்து நேற்று முன் தினம் முதல் மீண்டும் இந்த பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிந்துள்ளன.
ரயில்வே டிராக்கில் பாறைகளும் சரிந்து விழுந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை வரும் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரியில் மழை நீடிக்கும் என்பதால் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மலை ரயிலை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த ரயில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற ரயில் என்பதால் பலர் இந்த ரயில் மூலம் ஊட்டிக்கு செல்ல விரும்புவார்கள். தற்போது மலை ரயில் ரத்து என்பதால் தீபாவளிக்கு ஊட்டிக்கு செல்ல முடிவு எடுத்தவர்கள் சாலை மார்க்கமாக கார், பைக் ஆகியவற்றில் செல்லலாம். மேட்டுப்பாளையம் வரை வந்துவிட்டு பிறகு அங்கிருந்து பேருந்து மூலம் செல்லலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications