சசிகலா முதல்வராக கடும் எதிர்ப்பு: வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் எப்படி பேசுவார்? அன்புமணி கேள்வி
சசிகலா முதல்வரா பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என்றும் அவர் கூறியுள்ளா
சென்னை: சசிகலா முதல்வராக பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் முதல்வரானால் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் எப்படி பேசுவார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்ட சபைக்குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இவர் வரும் 9ஆம் தேதிக்குள் தமிழக முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
அவர் முதல்வராக அதிமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சசிக்கு எதிராக போராட்டங்கள்
சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து போடிநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலீட்டாளர்களிடம் எப்படிப் பேசுவார்?
அவர் கூறியதாவது, சசிகலா முதல்வரானால், வெளிநாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்களிடம் எப்படிப் பேசுவார்? சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது. இதனால் மறுபடியும் ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர் ஆவார். இவ்வாறு அன்புமணி கூறினார்.

மொக்கை வாங்கிய சசி
சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் தொகுப்பாளர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்தார் சசிகலா. மேலும் கொஞ்சமும் அப்டேட் ஆகாமல் நின்றுபோன இந்தியா டுடே தமிழ் பிரதி இன்னும் வெளியாகுவதாக கூறி மொக்கை வாங்கினார்.

எழுதி வைத்தே படிக்கும் சசி
இப்போது வரை சொந்தமாக ஒரு கருத்தைக் கூட கூறாமல் அனைத்துக் கூட்டத்திலும் எழுதி வைத்தே படித்து வருகிறார். இப்படி உள்ள சசிகலா முதல்வரானால் எப்படி ஆட்சியை நடத்துவார் என்று நோக்கத்திலேயே அன்புமணி ராமதாஸ் விளாசியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications