விவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை திருவள்ளுவர் மீதும் காட்ட வேண்டும்- கனிமொழி
Subscribe to Oneindia Tamil
சென்னை: விவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை இந்த அரசு திருவள்ளுவருக்கும் காட்ட வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கூறுகையில் விவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை இந்த அரசு திருவள்ளுவருக்கும் காட்ட வேண்டும்.

ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை மூலமே திருவள்ளுவர் சிலையை பராமரிக்க வைக்க வேண்டியுள்ளது. மேலும் ஹைட்ரோ கார்பன் குறித்து மத்திய அரசின் அறிக்கை சுற்றுச்சூழல் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது என கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது போல் விழுப்புரம் எம்பி ரவிக்குமாரும் திருவள்ளுவர் சிலையை முறையாக பராமரித்து விளக்குகளை பொருத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications