முல்லைப் பெரியாறு தீர்ப்பு- தமிழகம் வெல்ல தூணாக துணை நின்ற நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க உச்சநீதிமன்றம் முன்வந்தது. அப்போது தமிழகத்தில் திமுக அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழக அரசிடம் இந்த குழுவில் யாரை நியமிக்கலாம் என கேட்ட போது முதல்வராக இருந்த கருணாநிதி,. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனை அக்குழுவில் இடம்பெறச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் தமிழக அரசின் பிரதிநிதியாக அக்குழுவில் இடம்பெற்றார்.
அணையை ஆய்வு செய்வதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவர் தேவை என ஆலோசனை சொன்னது தமிழகப் பிரதிநிதியான நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன். அதன் பின்னர்தான் தொழில் நுட்ப வல்லுநர்களான சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகிய இருவரும் ஆனந்த் குழுவில் இடம் பெறுகின்றனர்.
இப்படி தயாரிக்கப்பட்ட ஆனந்த் குழு அறிக்கைகயால்தான் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று உறுதியான தீர்ப்பைக் கொடுத்து தமிழகம் கோரியபடி 142 அடிக்கு நீரை தேக்கி வைக்க அனுமதித்தது.
5 மாவட்ட வாழ்வாதாரத்தை காத்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு காரணமாக இருந்த தமிழகப் பிரதிநிதி நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணனுக்கு முல்லைப் பெரியாறு அணையால் பயனடையும் விவசாயிகள் காலந்தோறும் நன்றி பாராட்டுவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications