முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு: தமிழக அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய கேரளா!
தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான அளவீடு பணிகளை மேற்கொள்ள சென்ற தமிழக பொறியாளர்களை கேரள வனத்துறையினர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான ஆயத்தபணிகளில் தமிழக அரசு ஈடுப்பட்டு வருகிறது. இதற்காக மதகுகளில் குறியீடு வரையப்பட்டு கதவுகள் இயக்கி சரிபார்க்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர்தேக்கப் பகுதியான தேக்கடி புலிகள் காப்பகம் அருகே வாகன நிறுத்தும் இடத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அப்பகுதியை புகைப்படம் எடுத்து தமிழக பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது தேக்கடி சாலைப் பகுதியில் அளவீட்டு பணிகளை மேற்கொள்ள சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்பகுதி மக்களும் கேரள வனத்துறையினருடன் சேர்ந்து தமிழக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications