விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தீவிரவாதிகளா?: மக்களிடம் பீதி கிளப்ப வேண்டாம்- விஜயகாந்த்
சென்னை: முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலை புலிகளின் ஆதரவு இயக்கங்களால் முல்லை பெரியாறு அணை தகர்க்கப்படும் என்றும், இதற்காக மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தீவிரவாதிகளாக சித்தரிப்பு
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சொல்லியிருப்பது தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கரும் புள்ளி. பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்பதைப்போல இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டவர்களை தீவிரவாதிகள் என சித்தரித்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற செயலில் ஈடுபடும் அமைப்பினுடைய பெயரை தமிழக அரசால் வெளியிடமுடியுமா.

தமிழர்களுக்கு துரோகம்
பெரியாறு அணை பிரச்சனையில் வெற்றி பெற்றதாக கூறிக்கொண்டு, விவசாயிகளின் பெயரில் பாரட்டு விழாவை நடத்திக் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டையே கொச்சைபடுத்தும் வகையில், மத்திய புலனாய்வு துறையின் ஆய்வு அறிக்கையை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழர்களுக்கு செய்துள்ள துரோகம்.

சுமூக தீர்வு காணுங்கள்
முதல்வர் ஜெயலலிதா இது போன்று மக்களை பீதிக்கு உள்ளாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக்கொண்டு, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல்
மத்திய புலனாய்வுத்துறை ஆய்வு அறிக்கையில் முல்லைப்பெரியாறு அணையை குறிப்பிட்டு எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை என்று கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி கூறியுள்ளார். ஆனால் தமிழக அரசு இதுபோன்று மக்களை பீதிக்குள்ளாக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications