முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டுகிறது... தேனிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கம்பம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 142 அடியை எட்டும் நிலையில் இருக்கிறது. இதனால் தேனி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் எந்த நேரத்திலும் 142 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 17-ந் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு நீர் தேக்கப்பட்டது.

இந்த ஆண்டும் முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தற்போது 141.7 அடியாக உள்ளது. அப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்வதால் எந்த நிமிடத்திலும் 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டிவிடும்.
#Mullaperiyar water level touches 141.7ft at 6.30 am. With present inflow & withdrawal pattern it will touch 142 ft tomorrow early morning
— James Wilson (@jamewils) December 7, 2015 அப்படி 142 அடியைக் கடந்து விட்டால் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு நீர் திறக்க வேண்டும். இப்படி வெளியேறும் நீர் கேரள பகுதியில் சென்று இடுக்கி அணையில் சேரும்.
இதைத் தவிர்க்க நேற்று இரவு முதல் அணையில் இருந்து கூடுதல் நீர் உடனடியாக திறந்து விடப்பட்டது. நேற்று இரவு முதல் 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் தேனி மாவட்டம் லோயர்கேம்பிலிருந்து வைகை அணை வரை வாழும் மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications