137 அடியைக் கடந்தது முல்லைப் பெரியாறு அணை!
மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகு 137 அடியைக் கடந்தது.
தமிழகம் - கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ‘கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்.

நேற்று முன்தினம் 136 அடியைக் கடந்த நீர்மட்டம், இன்று 137 அடியாத் தாண்டியது. 142 அடி வரை நீரைத் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்கேற்ற நடவடிக்கைகளை தமிழக பொதுப் பணித்துறை செய்து வருகிறது.
இப்போது அணைக்கு வினாடிக்கு 2,494 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,756 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வழக்கமாக 456 கன அடி தண்ணீர்தான் திறந்துவிடப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணை தண்ணீரைக் கொண்டு வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேற்று முதல் கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இந்த தண்ணீர் வருவதால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயர வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 52.82 அடியாக இருந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இடுக்கி மாவட்ட மக்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள மாநில தலைமை செயலாளர் பத்மபூஷன் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. அணையில் உள்ள 13 மதகுகளில் ஒரு மதகு பழுதடைந்துள்ளது. அணையில் லேசான நீர்க்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதை வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். பழுதான மதகை தமிழக அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும்',' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications