முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரம்: தஞ்சையில் பழ. நெடுமாறன் கைது

தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகே இலங்கையில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் படுகொலையை சித்தரிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்காவின் ஒரு பகுதியை நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் போலீசார் உதவியுடன் இன்று அதிகாலை 5 மணிக்கு இடித்து தள்ளினர்.
இது குறித்து அறிந்த தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் மற்றும் தோழமை கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த தடியடியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கரிகாலன், செந்தில்நாதன் ஆகியோர் காயம் அடைந்தனர். இதை பார்த்த தோழமை கட்சியினர் தடியடி சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் ஏ.ஐ.டி.யூ.சியை சேர்ந்த மதிவாணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பாலு, செந்தில்நாதன், தனபாலன் உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே நினைவு முற்றம் இடிக்கப்பட்ட செய்தி அறிந்து பொதுமக்கள் அங்கு கூடினர். ஆயிரக் கணக்கான பொதுமக்களுடன் சேர்ந்து பழ. நெடுமாறன் மற்றும் தோழமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் குறித்து தகவல் அறிந்த டி.ஐ.ஜி. அமல்ராஜ், தஞ்சை மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் ஆகியோர் அதி விரைவுப்படை போலீசாருடன் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். அதன் பிறகு போலீசார் பழ. நெடுமாறன் மற்றும் தோழமை கட்சியினரை முற்றத்திற்குள் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
அவரை போலீஸ் வேனில் ஏற்றும்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிறைக்கு செல்வது எனக்கு ஒன்றும் புதிதன்று. தோழமை கட்சியினர் இன்று மாலை சந்தித்து பேசி முடிவு எடுப்பார்கள். நினைவு முற்றத்திற்காக லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் உயிரை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். தொண்டர்கள் ஆவேசப்படாமல் அமைதி காக்க வேண்டும் என்றார்.
பழ. நெடுமாறன் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட மதிமுகவைச் சேர்ந்த விடுதலை வேந்தன், தமிழ் தேச பொதுவுடமை கட்சி குழ. பால்ராஜ், மள்ளர் மீட்பு கழக நிறுவன தலைவர் செந்தில் உள்பட 40 பேர் தஞ்சை மேலவீதியில் உள்ள உதயா திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைத்த இரும்பு கம்பி வேலியை பொதுமக்கள் பிரித்து எறிந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications