நடிகை ராதாவின் அந்தரங்க செல்போன் பேச்சு.. ஆடியோ வெளியிட்ட முனிவேலு மனைவி
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண், கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் கதாநாயகியான நடிகை ராதா எனது கணவரை அபகரித்துக்கொண்டார். அவரிடம் இருந்து, எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகார் மனு மீது தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது, உமாதேவி துணை கமிஷனர் சரவணனிடம் மீண்டும் இன்னொரு புகார் மனுவை கொடுத்தார்.
நடிகை ராதா செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனுக்களுக்கு நடிகை ராதா எவ்வித பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.

ரவுடி மிரட்டல்
நேற்று முன்தினம் சென்னை வந்த நடிகை ராதா, புதிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். தன்னிடம் ரவுடி வைரம் என்பவர் செல்போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக, பேட்டி கொடுத்த அவர், ரவுடி செல்போனில் மிரட்டி பேசிய பேச்சு பதிவான ஆடியோ பதிவையும் வெளியிட்டார்.
கமிஷனர் அலுவலகத்தில் புகார்
இதையடுத்து, நடிகை ராதா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று. தன் மீது புகார் கொடுத்த உமாதேவி மீதும், செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி வைரம் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

மன்மதன் இல்லை
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘'உமாதேவியின் கணவர் முனிவேலு, எனக்கு சிறு வயது முதல் பழக்கமானவர். அந்த வகையில் நட்பு ரீதியாக அவரிடம் பேசி, பழகி வந்தேன். இதை தவறாக எடுத்துக்கொண்டு முனிவேலை நான் அபகரித்து வைத்துக்கொண்டதாக, முனிவேலின் மனைவி உமா என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். முனிவேலை அபகரித்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர் முகேஷ் அம்பானி அல்ல. அவரை நான் காதலிக்கும் அளவுக்கு, பெரிய மன்மதனும் அல்ல" என்று தெரிவித்தார்.

7 வருடம் வாழ்ந்தவர்
என் மீது புகார் கொடுக்க, உமாவை தூண்டிவிட்டவர் பிரபல தொழில் அதிபர் ஆவார். அந்த தொழில் அதிபருடன் நான் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். அவர் மீது நான் ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். பின்னர் அவரோடு சமாதானமாகி, புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன்.

2வது திருமண முயற்சி
அந்த தொழில் அதிபர் தற்போது 2வது திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவரை திருமணம் செய்யவிடாமல் நான் தடுத்து வருகிறேன். அதனால் அந்த தொழில் அதிபர்தான், எனக்கு எதிராக உமாவை தூண்டிவிட்டு, புகார் கொடுக்க வைத்துள்ளார். அந்த தொழில் அதிபர் தூண்டுதலின் பேரில்தான், ரவுடி வைரம் என்பவர் எனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் ராதா தெரிவித்தார்.

உமாதேவி வந்தார்
இதன்பிறகு, சிறிது நேரத்தில், நடிகை ராதா மீது முதலில் புகார் கொடுத்த, உமாதேவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அவர் புதிய புகார் மனு ஒன்றை, நடிகை ராதா மீது பதிவு செய்தார். நடிகை ராதா, தன்னை சைக்கோ பெண்மணி என்றும், கந்து வட்டி தொழில் செய்பவள் என்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேட்டி கொடுத்தார். அவரால் தனக்கும், தனது 2 மகள்களுக்கும் ஆபத்து இருப்பதாகவும் புதிய புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

கணவருடன் ஆபாச பேச்சு
மேலும் தனது கணவருடன் நடிகை ராதா செல்போனில் பேசிய பேச்சு பதிவான ஆடியோ கேசட் ஒன்றையும் உமா வெளியிட்டார். மேலும் ராதாவின் செல்போன் பேச்சு உரையாடல், வாட்ஸ்-அப்பிலும் வெளியானது. அந்த உரையாடலில் நடிகை ராதா, உமாதேவியின் கணவரோடு பேசுவது பதிவாகி உள்ளது. உமாதேவியின் கணவர், ராதாவுடன் மிகவும் ஆபாசமாக படுக்கை அறை அந்தரங்கம் பற்றி பேசுவது போன்ற உரையாடலும் அதில் உள்ளது.

வாபஸ் வாங்க சொல்கிறார்
உமாதேவி கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வைக்கவேண்டும் என்று உமாதேவியின் கணவரை நடிகை ராதா வற்புறுத்தும் உரையாடல் அதில் வருகிறது. இந்த செல்போன் பேச்சு உரையாடல் விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications