தமிழர்களின் பண்பாட்டை அழிக்க பாஜக நோட்டம்.. சிபிஐ முத்தரசன் குற்றச்சாட்டு
தமிழர்களின் பண்பாட்டை அழிக்க பாஜக நோட்டம் பார்த்து வருகிறது என்று முத்தரசன் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். அது நடக்காத செயல் என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடை, பொங்கலுக்கு விடுமுறை கிடையாது என்று தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டை அழிக்க பாஜக நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூரில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. முறையாக ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரி மாபெரும் ஆர்ப்பாட்டமும் அங்கு நடைபெற்று வருகிறது. எனினும் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்படவில்லை என்பதால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது என்பது தமிழர்களின் பண்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று முத்தரசன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடப்பதை யாரும் தடுத்துவிட முடியாது என்றும் அவர் பெருமிதம் பேசினார்.
மேலும், பொங்கலுக்கு விடுமுறை இல்லை என்று மத்திய அரசு தமிழர்களின் பண்பாட்டு அழிப்பிற்கான நோட்டத்தைப் பார்த்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய உடன் மத்திய அரசு பின்வாங்கியது. அதே போன்று ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்ற நிலையில், தமிழகத்தில் உள்ள மொத்த மக்களும் ஒன்றிணைந்து தங்களது கம்பீரமான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர வேண்டும் என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications