வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு –தலைமைப் பொறியாளர் செந்திலின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நெல்லை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தலைமை பொறியாளர் செந்திலின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொறியாளர் செந்திலின் ஜாமின் மனு நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொறியாளர் செந்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களில் செந்தில் மட்டும் ஜாமின் கோரி மனு செய்திருந்தார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதாடிய செந்திலின் வழக்கறிஞர், "அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதாலும், சிறைக்குள்ளேயே மருத்துவ வசதிகள் இருப்பதாலும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நெல்லை மாவட்ட நீதிபதி ரசீத் அகமது, செந்திலின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரின் நீதிமன்றக் காவல் நாளையோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications