அய்யோ.. எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேர பிள்ளைகளுக்கு.. கதறும் அபிராமியின் தந்தை!
எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேரப் பிள்ளைகளுக்கு, இன்று நான் கொள்ளி போடும் நிலைமை வந்து விட்டதே என தலையில் அடித்துக்கொண்டு கதறுகிறார் அபிராமியின் தந்தை சவுந்தரராஜன்.
Recommended Video

சென்னை: எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேரப் பிள்ளைகளுக்கு, இன்று நான் கொள்ளி போடும் நிலைமை வந்து விட்டதே என தலையில் அடித்துக்கொண்டு கதறுகிறார் அபிராமியின் தந்தை சவுந்தரராஜன்.
ஒரு பெண்ணின் முறையற்ற உறவு, காமவெறி, உல்லாச வாழ்க்கை உள்ளிட்டவற்றால் ஒரு குடும்பமே சின்னாபின்னமாகி சீரழிந்துள்ளது. தாயின் காம வெறிக்கு இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளன.
வீட்டில் பட்டாம்பூச்சி போல் சுற்றி திரிந்த குழந்தைகள் தாயின் கையால் விஷம் கொடுத்தும் மூச்சு திணறடிக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்களின் பேரக்குழந்தைகளை பெற்ற மகளே கொன்றதை நினைத்து நினைத்து கதறுகின்றனர் அபிராமியின் பெற்றோர்.

குழந்தைகளை தவிக்கவிட்டு
மகளின் கொடூர செயலால் வேதனைக்கும் அவமானத்திற்கும் ஆளான அபிராமியின் தந்தை பேரக்குழந்தைகள் துடிதுடிக்க கொல்லப்பட்டதை நினைத்து கதறி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2 மாதத்துக்கு முன்பு சுந்தரத்துடன் அபிராமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பகூட தனது இரண்டு பிள்ளைகளையும் தவிக்க விட்டுவிட்டு சுந்தரத்தின் வீட்டில் போய் இரண்டு நாட்களாக தங்கி விட்டாள்.

அடித்து உதைத்தேன்
அபிராமி-சுந்தரம் உறவு குறித்து எனக்கு தெரிய வந்தபோது, நான் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று, அபிராமியை அடித்து உதைத்து, அறிவுரை கூறி, மீண்டும் கணவனுடனேயே சேர்த்து வைத்தேன். அப்பொழுதே நான் சுந்தரம் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தால், இன்று இவ்வளவு பெரிய கொலை சம்பவம் நடந்து இருக்காது.

கேட்டு கொண்டே இருக்கிறது
நானும் எனது பேரப் பிள்ளைகள் இரண்டையும் இழந்து தவித்திருக்க மாட்டேன். எனக்கு இப்போது அபிராமியை பற்றித் துளிகூட கவலையில்லை. ஆனால் பேரப் பிள்ளைகளை நினைத்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இப்பொழுதும் எனது பேரப்பிள்ளைகள் இரண்டும் தாத்தா தாத்தா என்று என்னை அழைப்பது என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

பேராசை, உல்லாச போக்கு
நான் பெற்ற மகளே தனது இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமாக கொலை செய்வாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவளது பேராசை மற்றும் உல்லாசப் போக்கால்தான் இந்த அளவுக்கு கொடூர மனம் வந்து விட்டது.

எனக்கு கொள்ளிபோட வேண்டிய
பெண் பிள்ளைகளை கண்டித்து வளர்க்காத பெற்றோருக்கு, இது ஒரு பாடமாக இருக்கும். வயதான காலத்தில் என் இறப்பிற்குப் பிறகு, எனக்கு கொள்ளி போட வேண்டிய என் பேரப் பிள்ளைகளுக்கு, இன்று நான் கொள்ளி போடும் நிலைமை வந்து விட்டது. என் நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது. இவ்வாறு கூறி அவர் கதறி அழுதார் அபிராமியை பெற்ற சவுந்தரராஜன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications