For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து விமான விபத்துகள்.. கொத்து கொத்தாக உயிர் பலிகள்.. உலக பேரழிவுக்கு கட்டியமா?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: உலகம் முழுவதும் அடுதடுத்து விமான விபத்துகள்.. ஒவ்வொரு விபத்திலும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி.... இவையெல்லாம் உலக அழிவுக்கு முன்னோட்டமோ என்ற பீதியை எழுப்பாமல் இல்லை.

2012ஆம் ஆண்டு.. மாயன் நாட்காட்டிப்படி உலகம் அழியப் போகிற ஆண்டு என்று பரபரபாக கூறப்பட்டது.. அந்த 'கண்டத்தை' தாண்டி 2வது ஆண்டில் உலகம் பயணித்துக் கொண்டிருக்கிறது..

ஆனால் இந்த 2014ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் மாயன் நாட்கட்டி சொன்னபடி உலகம் அழிவதற்கான முன்னோட்டமோ என்ற பீதியை கிளப்புகிறது.

மலேசிய விமானம்..

மலேசிய விமானம்..

கடந்த மார்ச் 8-ந் தேதி..227 பயணிகளுடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நோக்கி விமானம் புறப்பட்டுச் சென்றது.. அது வான் பரப்பில் பயணித்த ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அதற்கு என்ன ஆனது? என்ற கேள்விக்கு மாதங்கள் உருண்டோடியும் இன்னமும் விடை கிடைக்கவில்லை.

உக்ரைனின் வீழ்த்தப்பட்ட விமானம்..

உக்ரைனின் வீழ்த்தப்பட்ட விமானம்..

இந்த பேரதிர்ச்சியில் இருந்து உலகம் விடுபடாத நிலையில் அண்மையில் பேரிடியாக 298 பயணிகளுடன் நெதர்லாந்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த விமானம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் நடுவானில் வெடித்து சிதறியது.. 298 பேரின் உடல்களும் 15 கிமீ சுற்றளவுக்கு சிதறி விழுந்தன..

தைவான்...

தைவான்...

மலேசிய விமானத்தை வீழ்த்தியது யார்? என்று உலகமே விவாதித்துக் கொண்டிருந்த போது தைவானில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. இதில் 47 பேர் பலியாகினர்.

அல்ஜீரியா..

அல்ஜீரியா..

மலேசியா, தைவான் விமான விபத்துகளைத் தொடர்ந்து நேற்று அல்ஜீரியா விமானம் மாலி நாட்டில் விழுந்து விபத்துக்குள்ளனது. ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ நாட்டில் இருந்து அல்ஜீரியா தலைநகர் அல்ஜியர்சுக்கு 116 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் மொசமான வானிலையால் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. மொத்தமாக 116 பேரும் பலியாகிப் போகினர்.

கொத்து கொத்தாக..

கொத்து கொத்தாக..

இப்படி அடுத்தடுத்து கொத்து கொத்தாக பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருப்பதாலேயே உலகம் அழியப் போகிறதோ அதாவது மாயன் நாட்காட்டிப் படியான உலகப் பேரழிவுக்கு இது முன்னோட்டமோ என்ற என்ற பீதி இயல்பாகவே எழுந்துள்ளது.

English summary
We know that the year is far from coming to an end and hance the headline may sound very inappropriate, but the incidents that have already happened are a prediction of what lies waiting for us in the future. Or is it the Mayan prediction that is coming true that the world may come to an end...we may have given 2012 a slip, but probably the end is near.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X