திருமணமான 6 மாதத்தில் மகள் மர்ம மரணம்: கலெக்டரிடம் தந்தை புகார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சேர்ந்தமரம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மமாக இறந்ததால் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்ணின் தந்தை கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

தச்சநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன். துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.. இவருக்கு விமலா என்ற மனைவியும், கோவிந்தன், முருகேசன் என்ற மகன்களும், அமுதா இசக்கியம்மாள் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதில் அமுதாவை அவரது உறவினர் கோவிந்தன் மகன் சரவணனுக்கு ஜூன் மாதம் திருமணம் செய்து கொடுத்தார். வரதட்சணையாக 10 பவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமுதா கோவிலுக்கு செல்வதாக அவரது அம்மாவிடம் கடைசியாக போனில் தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்து பிறகு எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் அமுதாவின் கணவரிடம் இருந்து அமுதாவின் அம்மாவுக்கு போன் வந்துள்ளது. அதில் சரவணன் அமுதாவுக்கு பேச்சு மூச்சில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் விரைந்து சென்று மகள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அமுதா உடல் முழுவதும் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், திருமணமாகி 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில் மகள் இறந்ததால் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி கலெக்டரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மனு அளித்தார். திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+