கரூர் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவிகள்
கரூர்: பத்தாம் வகுப்பு தேர்வில் பரணிபார்க் பள்ளி மாணவி மைதிலி கரூர் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கரூர் மாவட்டம் பரணி பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவி மைதிலி 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்தார். அவர் கரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்.
பரணிபார்க் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹரிப்பிரியா மற்றும் டி.என்.பி.எல். பள்ளி மாணவி அபிவிஷா ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடமும், கரூர் மாவட்டத்தில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளனர்.
மேலும் பரணிபார்க் பள்ளி மாணவி வைஷ்ணவி உள்பட 7 மாணவ, மாணவிகள் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாவது இடம் பிடித்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். மேலும், மாணவ-மாணவியரின் பெற்றோர்களும் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
நூலகம்:
கரூர் மைய நூலகத்தில் உள்ள இணையதள பிரிவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண மாணவ-மாணவியருக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவ, மாணவியர் நூலகத்திற்கு வந்து இன்று காலை முதல் தேர்வு முடிவுகளை இலவசமாக பார்த்து சென்றனர். மேலும், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications