புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டி.. இந்திரா நகர் தொகுதியில் ரெங்கசாமி போட்டி !
புதுவை: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்கான முதற் கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கட்சித் தலைவரும் முதல்வருமான ரெங்கசாமி.
புதுச்சேரி மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய 3 மாதத்தில் ஆட்சியைப் பிடித்தவர் ரங்கசாமி. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 17 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதியில் வெற்றி பெற்றார். அதிமுக 10 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதியில் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணி அமைச்சரவை வேண்டும் என்று அதிமுக கூறி வந்த நிலையில், சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் ரங்கசாமி தனித்து ஆட்சி அமைத்து 3வது முறையாக முதலமைச்சரானார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 16 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரும் சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என ரெங்கசாமி அறிவித்தார்.
முதற் கட்டமாக 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 5 ஆண்டுகளில் என்ஆர் காங்கிரஸ் திறம்பட ஆட்சி செய்துள்ளது. கட்சியின் மீதும் ஆட்சியின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கை காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக கூறினார்.
என்.ஆர்.காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:
முதற்கட்டமாக
1.உழவர்கரை - பன்னீர்செல்வம்
2.வில்லியனுர்- தேனி ஜெயகுமார்
3.இந்திரா நகர் - ரெங்கசாமி
4.முத்தியால்பேட்டை - பிரகாஷ்குமார்
5.உபபளம் - ஆனந்த்
6.உருளையான் பேட்டை - நேரு (எ) குப்புசாமி
7.முதலியார் பேட்டை - பாலன்
8.காரைக்கால் தெற்கு - சுரேஷ்
9.காரைக்கால் வடக்கு - திருமுருகன்
10.திருநள்ளாறு - சிவா
11.ஏனாம் - பைரவசாமி
12.பாகூர் -தியாகராஜன்
13.மாஹ - ரகுமான்
14.பி.ஆர். பட்டினம் -உதயகுமார்
15.கதிர்காமம் - ஜெயபால்
16.நிரவி - உதயகுமார்
17.அரியாங்குப்பம் - சபாபதி
18.நெடுங்காடு - பிரயங்கா
19.மங்களம் - சுகுமார்
20. மண்ணடிபட்டு- செல்வம்
21.தட்டாஞ்சாவடி -அசோக் ஆனந்த்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications