காவல் துறையை கண்டித்து உண்ணாவிரதம்..நெல்லை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கைது
நெல்லை: திருநெல்வேலியில் காவல் துறை நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு போட்டியிடுகிறார். மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் அண்மையில் பிரசாரம் மேற்கொண்டார்.

சீமான் வருகையையொட்டி, தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று 7 இடங்களில் முறையாக பேனர்கள் வைக்கப்பட்டனவாம். ஆனால், அனுமதிக்கப்பட்ட இடத்தில் பேனர் வைக்க போலீஸார் அனுமதிக்காததுடன், தன்னை பொதுமக்கள் முன்னிலையில் அநாகரிகமாக நடத்தியதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை, முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி பாளையங்கோட்டையில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கம்புகள் கட்டி பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் பொதுமக்களுக்கு இடையூறின்றி, தாமிரவருணி நதிக்கரையில் அமர்ந்து வியனரசு, திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் வந்து போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால், அவர் மறுத்ததையடுத்து, அவரை கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications