காவிரி: நாம் தமிழர் கட்சி பேரணியில் தீக்குளித்த விக்னேஷ்.. சோகத்தில் மூழ்கியது மன்னார்குடி !
மன்னார்குடி: காவிரி விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பேரணியின் போது அக்கட்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் திடீரென தீக்குளித்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியை சேர்ந்தவர் பாண்டியன் (விவசாயி). அவரது மனைவி கண்ணகி, இவரது மகன் விக்னேஷ் (26) இவர் மன்னார்குடி அர்பன் வங்கி பள்ளியில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, லார்டு செவன் ஹில்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். பின்னர் நாமக்கல் சுரபி பாலிடெக்னில் டி.எம்.இ. படித்துவிட்டு சென்னையில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்து கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்து கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்செய்தி அறிந்த மன்னார்குடியில் உள்ள அவரது பெற்றோர்கள் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தமிழர்களுக்காக சென்னையில் தீக்குளித்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications