For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதியை சந்தித்தால் மட்டும் மாற்றம் நடந்து விடுமா? கேட்கிறார் சீமான் - வீடியோ

சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக குடியரசுத் தலைவரை சந்தித்தால் மட்டும் என்ன நடந்துவிடப்போகிறது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநரை பற்றி ஜனாதிபதியிடம் கூறினால் ஒன்றும் நடக்காது சீமான் பேச்சு- வீடியோ

    மதுரை: குடியரசுத் தலைவரை சந்தித்தால் மட்டும் ஆட்சி மாற்றம் நடைபெற்றுவிடுமா? என நாம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறி 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மட்டுமில்லாது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் ஆளுநரிடம் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என மனு அளித்தனர்.

    Naam Tamilar katchi coordinator Seeman questioned about meeting POI

    ஆளுநர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என காத்திருந்த நிலையில், 'அது உள்கட்சி விவகாரம்; நான் சட்டப்படி தலையிட முடியாது' என அவர் கூறிவிட்டார்.

    இந்த நிலையில் எதிர்கட்சியான திமுகவைச் சேர்ந்த எம்.பிகள் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து உள்ளனர். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆளுநரை சந்தித்து என்ன நடந்துவிட்டது? அதேபோல் தான் குடியரசுத் தலைவரை சந்திப்பதால் மட்டும் தமிழக அரசியலில் மாற்றம் நடந்துவிடப்போவதில்லை.

    வேண்டுமானால், குடியரசுத் தலைவரை சந்தித்தோம். அவர் எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொன்னார் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அந்த சந்திப்பால் ஒன்றும் நிகழப் போவதில்லை என்பதுதான் உண்மை என சீமான் கூறினார்.

    English summary
    Naam Tamilar katchi coordinator Seeman questioned whether there will be any chages will occur in Tamilanadu by seeing President of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X