பேராயர் எஸ்றா சற்குணம் வீடு முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேராயர் எஸ்ரா சற்குணம் வீட்டை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
பேராயர் எஸ்றா சற்குணம் வீடு கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இவரது வீட்டை இன்று நாம் தமிழர் கட்சியினர் 100 பேர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

பேராயர் எஸ்றா சற்குணம் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் "ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான். இலங்கை ராணுவம் அல்ல" என்று கூறியதாகவும், அதனை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதாக நாம் தமிழ் கட்சியினர்கூறினார்கள்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்பு தென்னரசன், வாகை வேந்தன், அரிமாநாதன், ராஜ்குமார், திருமலை, கோகுல் உள்பட 75பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications