ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனுத்தாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில், மருது கணேஷ் போட்டியிடுகிறார்.

அதிமுக இன்னும் வேட்பாளர் பெயரை இறுதி செய்யவில்லை. அதேநேரம், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கலைக்கோட்டுதயம் இன்று, தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். அவர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் வந்து மனுத்தாக்கல் செய்தார்.
பின்னர், சீமான் நிருபர்களிடம் கூறுகையில், பணப்பட்டுவாடாவை தடுக்காமல் தேர்தல் நடத்துவது பயனற்றது. கடந்த தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்தது என கூறி தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம் இதுவரை யார் மீது நடவடிக்கை எடுத்துள்ளது?
அசோக்குமார் மரணம் குறித்து அன்புச்செழியன் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அன்புச்செழியனின் செயல்பாட்டிற்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை. கடன் வசூலுக்காக அத்து மீறுவதிலும், அவமானப்படுத்தும் போக்குகளில் நடந்துகொள்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications