7 தமிழர்கள் விடுதலை..கோட்டை நோக்கிய பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் - சீமான்
கோவை: பேரறிவாளனை விடுதலை செய்ய கோரி அவரது தாயார் அற்புதம்மாள் தலைமையில் வேலூரில் இருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபெறவுள்ள பேரணியில் நானும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் பங்கேற்கிறோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யக்கோரி 11ம் தேதி வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் பெரும் திரளானோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பேரறிவளாளன் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது.
பேரறிவாளனை விடுதலை செய்ய கோரி அவரது தாயார் அற்புதம்மாள் தலைமையில் வேலூரில் வருகிற 11-ந் தேதி சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடக்கிறது. இதில் நானும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் பங்கேற்கிறோம்.
பேரறிவாளனை தமிழக அரசு 164-வது பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது. இதை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே அற்புதம்மாள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். எனவே காத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications