அனிதாவுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்- மதுரை ரயில் நிலையம் முற்றுகை!
அனிதாவுக்கு நீதி மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை/புதுச்சேரி: அனிதா மரணத்துக்கு நீதி கோரி மதுரை மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியினர் இன்றும் போராட்டம் நடத்தினர்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழகத்தின் பல இடங்களில் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு மாணவர்கள் நீதி கோரி போராடி வருகின்றனர். இதனிடையே மதுரையில் ரயில் நிலையத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ரயில் நிலையம் நோக்கி நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக சென்றனர். ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது ரயில் நிலையத்துக்குள் நுழைந்து ரயில்களை மறிக்கவும் அவர்கள் முயன்றனர். ஆனால் போலீசார் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தினர்.
இதேபோல் புதுவையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications