Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநரின் ஆய்வு மாநில உரிமையை பறிக்கும் செயல் - சீமான் கடும் கண்டனம்

ஆளுநரின் ஆய்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வளர்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். மாநில அரசு இருக்கும் போது ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆளுநரின் செயலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், ஆளுநரின் செயல்பாடு நல்ல நோக்கத்திற்காகத்தான் என்பது போலத் தோற்றமளித்தாலும் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது தமிழக அரசியலை உற்றுநோக்கி வருகிறவர்களுக்கு நன்றாகப் புரியும்.

தவறான வழிகளில் மத்திய அரசு

தவறான வழிகளில் மத்திய அரசு

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்து ஒற்றையாட்சியை நிறுவ அதிகாரக்குவிப்பில் ஈடுபடும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, தங்களது ஆட்சியில்லாத மாநிலங்களில் அத்துமீறுவதும், அதிகாரத்தைத் தவறான வழிமுறைகளில் பயன்படுத்துவமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தனது கேடயங்களாக மாநில ஆளுநர் பதவியையும், வருமான வரித்துறையையும், அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி வருகிறது.

கைப்பாவையாக ஆளுநர் பதவி

கைப்பாவையாக ஆளுநர் பதவி

மத்திய அரசால் தேர்வுசெய்யப்படும் நியமனப் பதவி என்பதால் மத்திய அரசு தனக்கு இணக்கமாய் அனுசரித்துச் செல்வோரையும், தனது ஆட்டுவித்தலுக்கு இயங்குகிற கைப்பாவைகளையுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கும் என்பது வெளிப்படையானதாகும். மத்தியில் ஆளும் பாஜக அரசு தாங்கள் ஆளுகை செலுத்தாத மாநிலங்களில் தங்களது அதிகாரத்தைச் செலுத்த ஆளுநர் பதவியினைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி வருகிறது.

ஆளுநர் பதவி தேவையில்லை

ஆளுநர் பதவி தேவையில்லை

காங்கிரஸ் கட்சி ஆண்டு வரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குக் கிரண் பேடியைத் துணைநிலை ஆளுநராக நியமித்து அம்மாநில அரசிற்குக் குடைச்சல் கொடுத்து வரும் பாஜக, தற்போது ஆளுநர் பதவி மூலம் தமிழகத்தில் தனது காய்நகர்த்தல்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறது.மக்களாட்சித் தத்துவத்தை ஏற்றிருக்கிற இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்து நடைமுறையான ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்றாகவே இருக்கிறது.

தன்னாட்சிக்கு ஊறுவிளைப்பு

தன்னாட்சிக்கு ஊறுவிளைப்பு

மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் தனது அதிகாரத்தினைக் கொண்டு மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநிலத்தின் ஆட்சியினை அரசியல் சாசனத்தின் 356வது பிரிவின் மூலம் கலைத்துவிடலாம் என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவுப்பாலமாகச் செயல்பட வேண்டிய ஆளுநர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது மாநில உரிமைகளுக்கும், தன்னாட்சித் தத்துவத்திற்கும் ஊறு விளைவிப்பதாகும்.

மாநிலத்தின் சுயாட்சி

மாநிலத்தின் சுயாட்சி

அரசியலமைப்புச் சாசனத்தின் 163வது பிரிவு, ஒரு மாநில ஆளுநரின் பணிகளை நிறைவேற்ற, உதவிசெய்ய, ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையில் ஒரு அமைச்சரவை இருக்கும் எனக் கூறுகிறது. மேலும்,அரசியலமைப்புச்சாசனத்தின் கீழ் ஆளுநருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டும்தான் அவரால் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட முடியும் எனவும் தெளிவுபடுத்துகிறது. அப்படியிருக்கையில், ஆளுநரின் இந்த நடவடிக்கை மாநிலத்தின் சுயாட்சிக்கு எதிரானது.

முதல்வரிடமே கேட்டு இருக்கலாம்

முதல்வரிடமே கேட்டு இருக்கலாம்

மத்திய, மாநில அரசுகளின் திட்டம் குறித்த ஐயங்களைத் தலைமைச் செயலாளரிடமிருந்தோ, துறை சார்ந்த அமைச்சரிடமிருந்தோ அல்லது முதலமைச்சரிடமிருந்தோ அறிக்கையாகக் கேட்டுத் தெளிவு பெறலாம் எனும் வாய்ப்பு இருக்கும்போது ஆளுநரே நேரடியாக ஆய்வு செய்ததும், ஆலோசனை நடத்தியதும் அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதை ஆதரிக்கும் அமைச்சர்களின் செயலையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

மாநில உரிமைக்கு வேட்டு

மாநில உரிமைக்கு வேட்டு

மேலும், அதிகாரப்பரவலை செய்து மத்திய அரசிற்கு இணையான சமனியத் தனியரசாக மாநிலங்களை நிறுவ வேண்டும் எனவும் எடுத்துரைக்கிறது. இத்தகைய காலக்கட்டத்தில், மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதும், அவர்களின் உரிமைகளில் தலையீடுவதுமான போக்கு இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாக அமையும். எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசும், ஆளுநரும் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+