நாடா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டம் தயார் - 76 பேரிடர் மீட்புக்குழுவினர் முகாம்
நாடா புயல் நள்ளிரவு கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 76 வீரர்கள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.
கடலூர்: புயலோ, கனமழையோ எது என்றாலும் கடலூர் தப்புவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தானே புயல் தாண்டவமாடிய கடலூரில், கடந்த ஆண்டு கனமழை காவு வாங்கியது. இந்த ஆண்டு நாடா புயல் வாரி சுருட்ட தயாராகி வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் கடலூர் அருகே நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. புயல் பாதிப்புகளை சரி செய்யவும், மக்களை பத்திரமாக மீட்கவும் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 76 வீரர்கள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். மிதவைப் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளன. 800 மெட்ரிக் டன் அரிசி தயாராக உள்ளது. தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மீட்புக்குழுவினர் முழுநேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் 28 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மீட்பு பணிக்காக படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் சின்னத்தால் நாகை, கடலூர், எண்ணூர், காரைக்கால் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications