சசிகலா புஷ்பாவால் சமூகத்துக்கே அவமானம்... அவப்பெயர்.... நாடார் கூட்டமைப்பு கடும் கொந்தளிப்பு!!
சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு பாலியல் தொல்லை புகாரில் சிக்கியிருக்கும் சசிகலா புஷ்பாவால் எங்கள் சமூகத்துக்கே அவமானம்...அவப்பெயர் என்று அனைத்து நாடார் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் பேசிய பஞ்சாயத்தை கிளப்பினார் சசிகலா புஷ்பா. இதனால் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
தற்போது சசிகலா புஷ்பா மற்றும் குடும்பத்தினர் மீது ஏகப்பட்ட புகார்கள்... இதில் கணவர் மற்றும் மகனின் பாலியல் தொல்லைகளுக்கு சசிகலா புஷ்பா உடந்தையாக இருந்தார் என்பதும் குற்றச்சாட்டு.

இடைக்கால தடை
இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தது சசிகலா புஷ்பா குடும்பம். இதை ஏற்று வரும் 22-ந் தேதி வரை சசிகலா புஷ்பா குடும்பத்தினரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடார்கள் ஆதரவு
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, நான் நினைத்தால் தமிழக அரசியலை திருப்பிப் போடுவேன் என்றும் தமக்கு நாடார் சமூகம் ஆதரவாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

நாடார் கூட்டமைப்பு மறுப்பு
ஆனால் இதை அனைத்து நாடார் கூட்டமைப்பு மறுத்துள்ளது. இது குறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அனைத்து நாடார் கூட்டமைப்பு தலைவர் கணேசன் நாடார் கூறியதாவது:
சசிகலா புஷ்பா எம்.பி. இவ்வளவு நாள் அரசியல் ரீதியாக பிரச்சனை செய்து வந்தார். ஆனால் நேற்று பத்திரிகைகளில் பேட்டியளிக்கும் போது அனைத்து நாடார் சமூகமும் எனக்கு ஆதரவாக பின்னால் வரும் என்பது போல கூறியுள்ளார்.

ஏற்க முடியாது...
ஆனால் அவர் செய்த தவறுக்கு யாரும் அவரை ஆதரிக்க மாட்டார்கள். எங்கள் சமூகத்தினர் யாரும் அவரை ஏற்கமாட்டோம்.

ஜெ. அடித்தார் என்பதை நம்ப முடியாது
அவர் கணவர், மகன் மீது வந்துள்ள புகார் உண்மையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். அவரை ஜெயலலிதா அடித்தார் என்பது நம்பும் படியாக இல்லை.

அவமானம்... அவப்பெயர்...
சசிகலா புஷ்பாவால் எங்கள் சமூகத்துக்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஆகையால் நாடார்கள் அவருக்கு ஆதரவு தருகிறோம் என்பதை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு கணேச நாடார் கூறியுள்ளார்.
வடபோச்சே!
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications