ஜெயலலிதாவுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு - டுவிட்டரில் பதிவிட்ட விஷால்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தனர்.
நடிகர் சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் மோதின. இதில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற உடனேயே முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய நடிகர் சங்க நிர்வாகிகள் முதல்வரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சிறப்பாக நடக்க உதவியதற்கு நன்றி தெரிவித்தார்கள்.
Jus met our honourable cm.fantastic meetin.told us dat govt will extend full support 2 nadigar sangam.very positive.v sincerely thnk our cm
— Vishal (@VishalKOfficial) November 16, 2015 இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், ‘இன்று தமிழக முதல்வரைச் சந்தித்தோம். அருமையான சந்திப்பு. நடிகர் சங்கத்துக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். முதல்வருக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications